வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.

இன்னும் சிலர் இதனை மூட நம்பிக்கை என சொல்லுவார்கள் ஆனால் நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஒரு துள்ளியமான அறிவியல் காரணம் அல்லது மருத்துவ காரணம் இருக்கும் என்பது இது போன்ற பல விடயங்ளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா? இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க | Why Do You Hang Chillies And Lemons At The Doorஅந்த வகையில் வீட்டு வாசலில் இவ்வாறு எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டுவதன் அறிவியல் பின்னணி என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அலட்சுமிக்கு மிகவும் விருப்பமானது புளிப்பு, காரம் மற்றும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் வீட்டு வாசலிலேயே இருப்பதால் அவற்றை சாப்பிட்டுவிட்டு வீட்டில் நுழையாமலேயே சென்றுவிடுவாள்.

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா? இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க | Why Do You Hang Chillies And Lemons At The Door

அதனால் தான் நாம் வீட்டு வாசலில் தொங்கவிடுகிறோம் என நம்மில் பலரும் நம்புகின்றோம்.ஆனால் இதன் பின்னால் துள்ளியமான அறிவியல் காரணம் இருக்கின்றது. 

எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் ‘வைட்டமின் - சி’ அதிகமாக காணப்படுகின்றது இதனை ஒரு பருத்தி நூலில் கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெதுவாக பருத்தி நூலின் வழியாக மிளகாயுடன் சேர்ந்து ஆவியாகின்றது.

இவ்வாறு வெளியேறும் இந்த வாசனை காற்றில் கலப்பதனால் நம் சுவாச ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கின்றது. இந்த வாசனை காற்றில் பரவுவதன் மூலம் ஒரு புத்துணர்வு கிடைக்கின்றது.

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா? இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க | Why Do You Hang Chillies And Lemons At The Doorஅதுமட்டுமல்லாமல் எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. அதன் மூலம் உண்டாகும் நோய் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.

பெதுவாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை அதிகமாக இருப்பதால் அதனை வீட்டு வாசலில் கட்டி வைப்பதன் மூலம் நம்மை நோக்கி நல்ல சக்திகளை ஈர்க்கவும் இது உதவுகின்றது.