கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள்.

அப்படி பெண்கள் கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளுள் கால் வீக்கம் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancyகர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை நிலை போல் கால் வீக்கமும் கர்ப்பினி பெண்களுக்கு இயல்பானது என கருதிவிட கூடாது என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனை தவிர்க்க கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancyகர்ப்பிணிப் பெண்கள் தங்கள் சாப்பிடும் உணவுகளில் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

அதிக உப்பைச் சேர்த்துக் கொள்ளும் போது இரத்த அழுத்தம் மாறுபடும். சரியான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதனால் காலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancyமதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் வெளியில் செல்வதை நிறுத்தி விடுங்கள். தினம் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

மாலை வேளை மட்டுமல்லாமல் வீட்டின் அறைகளிலும் அவப்போது நடந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சரியான அளவில் ஏற்பட்டு கால் வீக்கம் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் நிற்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancy

ஒரே இடத்தில் நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் காலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே இதனைத் தவிர்க்கக் நெடுநேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டாம். தினமும் குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் அருந்தும் போது உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் நீங்கும். மேலும் கால் வீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு வேளைகளில் 10 நிமிடம் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைத்துக்கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancyஇதனால் வீக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். ஹீல்ஸ் செருப்புகளை அணிவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் வீக்கம் ஏற்படுவதை தடுக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச் சத்ததேவைப்படும். இந்த ஊட்டச்சத்துக்கள் பொட்டாசியத்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்யும். இதனால் கால் வீக்கம் ஏற்படுவதைச் சரி செய்யலாம்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancyபடுக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். இடது பக்கமாகப் படுப்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு படுப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீரான அளவில் ஏற்பட்டு கால் வீக்கம் ஏற்படுவது குறையும்.

பாக்கெட்டுகளில் இருக்கும் உணவுகளையும் , துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பும் சேர்த்து இருப்பார்கள். இது கால் வீக்கத்தை அதிகரிக்க செய்து விடும்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancy

பழவகைகளான வாழைப்பழம், அவகேடோ, அத்திப்பழம், செலரி, கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. அதுபோல தக்காளி, முட்டைக்கோஸ் , புதினா போன்ற காய்கறிகளிலும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.

ஆகவே இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். காபி அருந்துவதைத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் காபியில் நிறைந்துள்ள காபீன் சிறு நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வாறு குறைக்கலாம்னு தெரிஞ்சிக்கோங்க | How To Manage Swollen Feet During Pregnancy

மேலும் உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் பாதிக்கப்படும். இதற்கு பதிலாக மிளகு மற்றும் புதினா கலந்த தேநீரை அருந்த இது கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.