உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளமை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், 7 அடி 9 அங்குலங்கள் கொண்ட  மிக நீளமான கூந்தலை கொண்டுள்ளவர் என்ற கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

உலகில் மிக நீளமான கூந்தல் கொண்ட இந்தியப் பெண்... கின்னஸ் சாதனை | Uttar Pradesh Woman World Record For Longest Hair

இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்ததன் மூலம் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

ஸ்மிதாவின் நம்பமுடியாத குறித்த சாதனை பயணம் அவரது 14 வயதில் தொடங்கியுள்ளது. அவர் முடி வெட்டுவதைத் முற்றாகவே தவிர்த்துள்ளார்.

உலகில் மிக நீளமான கூந்தல் கொண்ட இந்தியப் பெண்... கின்னஸ் சாதனை | Uttar Pradesh Woman World Record For Longest Hair

1980களில் இந்தி நடிகைகளின் கூந்தலின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது கூந்தலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வதில் கூடிய அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளார்.

கூந்தலை வளர்ப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இப்போது சாதனைகளின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்து பெருமைப்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

https://twitter.com/i/status/1729802883997302976