தினமும் பால் குடித்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் என்ற  வார்த்தையை பெருமபாலானவர்கள் சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்திருக்கிறோம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் அவசியம் என்றும், அதில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதம் இருப்பதால் தினசரி உணவில் பால் இடம்பெற வேண்டும் என்றும் பெரியவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளனர்.

உண்மையில், பால் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவாகும். கால்சியம், புரதம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் பாலில் காணப்படுகின்றன. குறிப்பாக சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 கிடைப்பதற்கான முக்கிய உணவுகளில் ஒன்றாக பால் இருக்கிறது.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரு உணவு சத்தானது என்பதாலேயே அது அனைவரது உடலுக்கும் ஒரே விதமாகப் பொருந்திவிடாது. பால் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம் | People Who Should Never Drink Milk

பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பிரச்சனைக்குக் காரணமாக இருப்பதில்லை. சிலருடைய உடல், பாலில் உள்ள குறிப்பிட்ட கூறுகளைச் சரியாகச் செரிக்கவோ அல்லது சகித்துக்கொள்ளவோ முடியாததே பிரச்சனைக்கு காரணமாகிறது.

இதனால், சிலருக்கு பால் நன்மையைவிட அசௌகரியத்தையே ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் யாரெல்லாம் பால் எடுத்துக்கொள்ளும் முன்னர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்கலாம்.  

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம் | People Who Should Never Drink Milk

பால் குடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதா? அப்படியானால், உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம்.

பாலில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரைதான் லாக்டோஸ். இதைச் செரிக்க உடலுக்கு லாக்டேஸ் என்ற நொதி தேவைப்படுகிறது. சிலரிடம் இந்த நொதி போதுமான அளவில் இல்லாததால், பால் குடித்த பிறகு செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால், “பால் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை” என்று நினைத்து தானாகவே அனைத்து பால் பொருட்களையும் முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பால் ஒவ்வாமை

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம் | People Who Should Never Drink Milk

 

பால் குடித்த பிறகு ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் லாக்டோஸ் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு பால் புரதங்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம்.

பாலில் உள்ள கேசின் அல்லது வே புரதங்களை உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தீங்கு விளைவிப்பதாகக் கருதி எதிர்வினையாற்றும்போது பால் ஒவ்வாமை ஏற்படலாம்.

இதனால் தோலில் தடிப்புகள், வீக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். குறிப்பாக பால் அருந்திய பிறகு கடுமையான ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றினால் அதை சாதாரண செரிமானப் பிரச்சனை என்று நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

நெஞ்செரிச்சல் இருப்பவர்கள்

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம் | People Who Should Never Drink Milk

அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் அதிக கொழுப்பு கொண்ட பாலை அதிகமாக அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பால், குறிப்பாக இரவு உறங்குவதற்கு முன்பு அதிகமாக அருந்தும்போது, வயிற்றில் கனமான உணர்வு அல்லது நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்களை அதிகரிக்கக்கூடும்.

எனவே, “பால் ஆரோக்கியமானது என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்” என்ற அணுகுமுறை சரியானதல்ல.

ஒருவருடைய உடல்நிலை, வயது, உணவுமுறை மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பாலின் அளவும் தாக்கமும் மாறுபடலாம்.

முகப்பரு பிரச்சினை உள்ளவர்கள்

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம் | People Who Should Never Drink Milk

பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொண்ட பிறகு சிலருக்கு முகப்பரு அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. சில ஆய்வுகளிலும் பால் பொருட்களுக்கும் முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

எனினும், இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. உங்களுக்கு பால் அல்லது குறிப்பிட்ட பால் பொருட்களை எடுத்துக்கொண்ட பிறகு முகப்பரு தொடர்ந்து அதிகரிப்பதை கவனித்தால், உங்கள் உணவுப் பழக்கத்தையும் அறிகுறிகளையும் மருத்துவரின் ஆலோசனையுடன் மதிப்பீடு செய்துக்கொள்வது சிறந்தது. 

 

பாலை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம் | People Who Should Never Drink Milk

பால் சத்தான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் “சத்து நிறைந்தது” என்பதும் “அனைவருக்கும் ஏற்றது” என்பதும் ஒன்றல்ல. சிலருக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அதே பால் செரிமான அல்லது ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

எனவே, பால் குடித்த பிறகு தொடர்ந்து வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, வாந்தி, தோல் தடிப்பு, வீக்கம் அல்லது முகப்பரு போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் காரணத்தைக் கண்டறிவது அவசியம்.