பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதி பெறாத மாணவர்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
அவ்வாறான மாணவர்களின் தரவுகளை திறன் அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
தனியார் மற்றும் அரச துறைகளில் காணப்படும் பல்வேறு கற்கை நெறிகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான தரவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களின் தரவுகளை திறன் அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.