மழைக்காலங்களில் அதிக தொல்லை கொடுக்கும் கொசுக்களை ஒழிக்க வீட்டு வைத்தியம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கொசுக்களினால் பல நோய்கள் ஏற்படுகின்றது. அதுவும் மழைக்காலங்களில் அதிகமான பிரச்சினையை கொடுக்கின்றது. 

இதற்கு பல வழிகளை முயற்சித்தும் வருகின்றனர். கடைகளில் விற்கும் கொசுவிரட்டி, மின்சாரத்தினால் பயன்படுத்தப்படும் பேட் என முயற்சித்தும் எந்தவொரு பலனும் இல்லை.

கொசுக்களை விரட்ட வேண்டுமா? எளிய வீட்டு வைத்தியம் இதோ | Kill Mosquitoes Your House Home Remediesசமையலறை பொருட்களில் ஒன்றாக இருக்கும் பூண்டு இதற்கு உதவியாக இருக்கின்றது. ஒரு டம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன், பூண்டு, கிராம்பு இவற்றினை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு, ஆறிய பின்பு ஸ்பிரே பாட்டிலில் வைத்து பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கொசுக்களை விரட்ட வேண்டுமா? எளிய வீட்டு வைத்தியம் இதோ | Kill Mosquitoes Your House Home Remedies

இதே போன்று கிராம்பு மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். அதாவது எலுமிச்சையை பாதியாக வெட்டி அதனுள் கிராம்புகளை சொருகி வைத்து கொசு நடமாடும் இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சைட்ர் வினிகர் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சம அளவு கலந்து ஸ்பிரே பாட்டிலில் வைத்து ஸ்பிரே செய்தால் நலல பலனை காணலாம்.

இதே போன்று சோப்பு நீர் கரைசலையும் ஸ்பிரே பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.

புதினா செடி வாசனையும் கொசுவிற்கு எதிரி என்று தான் கூற வேண்டும். புதினா இலைகளை நசுக்கி கொசு வரும் இடத்தில் போட்டுவிட்டால் சற்று கொசு தொந்தரவு குறையும்.

கொசுக்களை விரட்ட வேண்டுமா? எளிய வீட்டு வைத்தியம் இதோ | Kill Mosquitoes Your House Home Remedies