அறிவியல் சாதனங்களின் வளர்ச்சி நம்முடைய அன்றாட வேலைகளை இலகுவாக்கிக்கொள்ள தான் உருவாக்கப்படுகின்றது.ஆனால் அவற்றில் இருக்கும் பாதகத்தை மட்டுமே தேடிபோய் அனுபவிப்பது இன்றைய இளைஞர்களின் கடமையாக காணப்படுகின்றது. 

தொலைதொடர்புக்கு உருவாக்கப்பட்ட மொபைல் போன், பொழுதுபோக்கு பொருளானதும், வேலையை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்ட லேப்டாப், ஆன்லைனில் விளையாட பயன்படுத்தப்படுவதும் இதற்கு உதாரணம். இப்படி தான் ஒவ்வொரு சிறந்த கண்டுபிடிப்பையும், நாம் திசை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் | Damage To The Ears Caused By The Use Of Headphonesமொபைல் போனை தொலைதொடர்புக்காக பயன்படுத்தும் வரை பிரச்சனை இருக்காது; அதை பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் போது, அதை அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும் பார்வை குறைபாடுகள், அதே போல தான் லேப்டாப்பும். இதே போல தான், ஹெட்போன் பயன்பாடும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். ஆனால், இங்கே அளவை மீறி உபயோகிக்கும் பொருட்களில் ஹெட்போனும் ஒன்று. சிலர் சட்டை போடும் போது பனியன் அணிவதைப் போன்று, ஹெட்போன் மாட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் | Damage To The Ears Caused By The Use Of Headphones

பலர் அதை ஸ்டைலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தான் இதில் வருந்தக்கூடிய ஒன்று. பேச்சை தெளிவாகவும், தனியாகவும் கேட்க கண்டுபிடிக்கப்பட்ட ஹெட்போன், பலர் காதுகளில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு ஒட்டிக்கொண்டே இருக்கிறது.

அடிப்படையில் காது ஒருவகை கழிவை வெளியேற்றும் பகுதி. நீங்கள் தொடர்ந்து காதில் ஹெட்போன் மாட்டியிருந்தால், கழிவு வெளியேறாமல் தேங்கிவிடும். அது அரிப்பு மாதிரியான தொல்லைகளை உங்களுக்கு தரும்.

எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் | Damage To The Ears Caused By The Use Of Headphonesஹெட்போன் அதிகம் உபயோகிப்பவருக்கு இயல்பாகவே அதிக சத்தத்தை மட்டுமே கேட்கும் திறன் ஏற்படலாம். இதனால், சாதாரண சத்தத்தை கூட கூடுதல் சவுண்ட் வைத்து கேட்கத் தோன்றும். இது செவி மடலை கடுமையாக பாதிக்கும். அடிக்கடி காது வலி ஏற்பட இது காரணமாக அமைகின்றது. 

எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் | Damage To The Ears Caused By The Use Of Headphones

இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் செவித்திறன் அதிகரிக்கும் இயந்திரத்தை சிறுவயதில் வாங்கி அணியும் சூழல் ஏற்படும். தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவது மூளையை பாதிக்கிறது. குறிப்பாக உங்களின் கற்பனை திறனை கடுமையாக பாதிக்கும் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். 

‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்கிற நோயை ஹெட்போன் பயன்பாட்டாளர்கள் சந்திப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் அது ஒரு மின்சாதன பொருள். மொபைலில் இருந்து மின்சாரத்தை கடத்தும். அது ஏற்படுத்தும் பாதிப்புகளும் கடுமையாகனதாவே இருக்கும்.