பொதுவாகவே உலகில் அனைவருக்கும் வெற்றியடைவதில் தான் ஆசை இருக்கும். தோல்வியடைய வேண்டும் என நினைத்து உலகில் யாரும் எந்த வேலையையும் தொடங்குவதில்லை.

ஒரு சிலர் வெற்றி தோல்வி பற்றி சிந்திக்காமல் தங்களின் கடமையை செம்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பார்கள் இன்னும் சிலர் தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து வெற்றியடைந்தே ஆகுவார்கள்.

தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These 5 Zodiac Signs Are Afraid Of Failure Checkஆனால் குறிப்பிட்ட சிலர் மனத்திற்குள் எப்போதும் தோல்வியை நினைத்து பயந்துக்கொண்டே இருப்பார்களாம் அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பவர்கள் , கன்னி ராசிகாரர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள், எதை செய்தாலும் தோல்வியடைந்துவிடக் கூடாது என சிந்தித்து கொண்டே இருக்கக் கூடியவர்கள்.

உயர்ந்த விடயங்களை சாதிக்க வேண்டும் என குறிக்கோளை உடையவர்களாகவும் இருப்பவர்களும் இவர்கள் தான்.

தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These 5 Zodiac Signs Are Afraid Of Failure Check

இவர்கள் தோல்வியை பற்றி அதிகமாக பயப்படுவதே பல சமயங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றது.

அவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என நினைக்காமல் தோல்வி ஏற்பட்டு விட கூடாது என தோல்வியை முன்னிலைப்படுத்தி தான் சிந்திப்பார்கள்.

இந்த பயத்தினால் பல பொன்னான வாய்ப்புகளை இவர்கள் தவறவிடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

ரிஷபம்

ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் நிலையான தன்மையை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள், வெளியில் பெரிய தைரியசாலி போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் தோல்வி பற்றிய பயமுடையவர்களாக இருப்பார்கள்.

தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These 5 Zodiac Signs Are Afraid Of Failure Check

இதனாலேயே இவர்கள் புது விஷயங்களை கையாளமல் இருப்பர். ஆனால், இவர்களுக்குள்ளும் அவர்கள் பயப்படும் புது சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களை அறியாமலேயே அதிகமாக இருக்கும்.

தோல்வி பயத்தாலேயே இவர்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறவிடுகின்றார்கள். இவர்கள் தன்னை தானே நம்பி சில செய்களில் இறங்கினாலே போதும், கண்டிப்பாக இவர்களுக்கு வெற்றி தான். 

மகரம்

மகர ராசியை சேர்ந்தவர்கள், எந்த விடயத்திம் பெறுப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களுக்கு இவர்களே போட்டியாளர் என சிந்தித்து சுயமாக முன்னேற வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள், அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.

தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These 5 Zodiac Signs Are Afraid Of Failure Check

 

இவர்கள் இப்படி இருப்பதை பார்க்கும் பலர், இவர்களை “லட்சியவாதி” என்ற பிரிவில் அடக்குவதுண்டு.

ஆனால் உண்மையில் இவர்கள் தோல்வி அடைந்து விட கூடாது என்ற எண்ணத்தாலேயே பொறுப்பாக இருக்கின்றனர் இவர்களுக்கு தோல்வி என்றாலே பயம் வந்துவிடுகின்றது.

மீனம்

மீன ராசிக்காரர்கள், எப்போதும் கற்பனை உலகில் இருப்பார்கள். வெற்றியை நினைத்து கனவு கண்டாலும் தோல்வி பயத்தால் வரும் வாய்ப்புகள் பலவற்றை இழந்துவிடுகின்றார்கள்.

தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These 5 Zodiac Signs Are Afraid Of Failure Checkஇவர்கள் விமர்சனங்களை நினைத்து பெரிதும் குழப்பிக்கொள்வார்கள். தோல்வியால் தான் ஏமாற்றம் அடைந்து விடுவோமோ என்று நினைப்பதை விட, பிறர் தன்னால் ஏமாற்றம் அடைந்து விடுவரோ என்று அதிகம் பயப்படுபவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் தன்நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கொண்டாலே போதும் இவர்கள் வெற்றி அடைவது நிச்சயம்.

கடகம்

கடக ராசியை சேர்ந்தவர்கள் அதிகமாக உணர்ச்சி வயப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டுவிடும்.

இவர்கள், தன்னை மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்கள் குறித்தும் அதிகம் சிந்திப்பவர்களாக இருக்கின்றனர்.

தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These 5 Zodiac Signs Are Afraid Of Failure Checkதன்னை விட தனக்கு பிடித்தவர்கள் பற்றி அதிகமாக யோசிப்பதன் காரணமாக இவர்களுக்கு கிடைக்கும் பல வாய்ப்புகளை இழந்து விடுகின்ற நிலையும் ஏற்படுகின்றது.

இது நல்ல குணாதிசயம் என்றாலும், இவர்கள் பிறரிடம் ஏமாற இதுவே பெரிய காரணமாக இருக்கின்றது.அவர்களுக்கு தோல்வி பற்றிய பயம் உள்ளுக்குள் இருந்துக்கொண்டே இருக்கும்.