பொதுவாகவே அனைத்து மதத்திலும் சாம்பிராணி தூபம் போட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.  இந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,  செவ்வாய், வெள்ளி  கிழமைகளில் சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள் அகன்று லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

சாம்பிராணி புகையை, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப் புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்குவதற்காகவும் பயன்படுத்தினர். நமது முன்னோர்கள் எதையும் காரணம் இன்றி பின்பற்றியது கிடையாது. 

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | What Is The Benefits Of Sambrani Smoke

முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த மூட நம்பிக்கை என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம்.அதனால் தான் தற்காலத்தில் இவ்வளவு அறிவியல் வளர்ச்சி இருந்தும் ஆரோக்கியமாகவும் மன அமைதியுடனும் வாழ முடியாத அவல நிலை காணப்படுகின்றது. 

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | What Is The Benefits Of Sambrani Smokeஇயற்கை சாம்பிராணி எதற்கு என்ற மகத்துவம் அறியாமல், அதை விலக்கி, செயற்கையாக கிடைக்கும், சாம்பிராணி வில்லைகளை வாங்கி, நாமும் சாம்பிராணி புகையை வீடுகளில் போடுகிறோம், என்று நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்கிறோம்.

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | What Is The Benefits Of Sambrani Smoke

தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் சுத்த சாம்பிராணியை பொடியாக்கி தூவ, வீடுகளில், தெய்வீக நறுமணம் உண்டாகும்.

இந்த சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர். முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும்.

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | What Is The Benefits Of Sambrani Smoke

சாம்பிராணி தூபம் பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல் பாதுகாக்க உதவுகின்றது.

மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்வதுடன் நீண்ட நாட்கள் வரை தலை முடி நரைக்காமல் இருக்கும். 

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | What Is The Benefits Of Sambrani Smoke

தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்றுநோயை  சரியாக்கக்கூடிய மருத்துவ தன்மை மிக்கவை என தற்போதைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

இதையே நம் முன்னோர் அன்றே கூறி, வீடுகளில் வாரமிருமுறையும் சாம்பிராணி புகைக்கச் சொல்லி, அறிவுறுத்தி வந்தனர். சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது.இது சுவாச கோளாறுகளை சீர் செய்வதுடன் துரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.