உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்பது பலரின் பயமாக இருந்து வருகின்றது.
உடல் எடை அதிகரிக்காமலும் நீங்கள் விரும்பிய உணவுகளை சாப்பிடவும் என்ன வழி என்பதை ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக மினி உணவுகளாக சேரத்துக் கொள்ள வேண்டுமாம்.
உடல் எடையை நீங்கள் குறைக்க வேண்டும் என்றால், தேவையில்லாத கலோரிகள் உடம்பில் சேர்வதை தடுக்கவும், உடலுக்கு தேவையான கலோரிகள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.
- ஒரு கப் சோயா பால் மற்றும் பாதாம் பருப்புடன் அன்றைய நாளை நீங்கள் தொடங்கினால் குறைவான கலோரிகளை பெறுவதுடன், உடல் எடையையும் குறைக்க முடியும்.
- உடல் எடையை குறைக்கும் உணவில் முக்கிய ஒன்று தான் கோதுமை பிரட் சாண்ட்விச். குறைவான கலோரிகளோடு ஆரோக்கியமான உணவாக இதனை தெரிவு செய்யலாம். ஒரு முழு கோதுமை பிரட்டில் துருவிய சிக்கன், வெள்ளரி, தக்காளி, பனீர் மற்றும் புதினா சட்னி இவற்றினை சேர்த்து சாண்ட்விச்சாக எடுத்துக்கொள்ளவும்.
- சாப்பிட்ட பின்பும் பசி ஏற்பட்டால் ஒரு கிண்ணம் முளைகட்டிய பச்சை பயறை எடுத்து சாலட்டாக செய்து சாப்பிடலாம். இவை பசியை கட்டுப்படுத்தவும், கலோரிகளை அதிகரிக்காமலும் இருக்கும்.
- இதே போன்று வேர்கடலை மற்றும் சுண்டல் இவற்றினை சமஅளவில் எடுத்து காலை உணவாக சாப்பிடவும். பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுக்குள் வைக்கும்.
- எடையைக் குறைப்பதற்கு சப்பாத்தியை தெரிவு செய்தால், இனி கோதுமை தவிடையும் சப்பாத்தி செய்து சாப்பிடலாம். ஆனால் வழக்கமான சப்பாத்தி அளவில் சாப்பிடாமல் குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.
- முட்டையின் வெள்ளை கருவில் புரதம் அதிகமாகவும், கலோரி குறைவாக உள்ளதால் இதனை ஆம்லேட் செய்து சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
- உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதற்கு பழங்கள் உதவியாக இருப்பதால், ஆப்பிள், செர்ரி, ஒரு கிண்ணம் தர்பூசணி எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கிண்ணம் பருப்புடன் தயிர் சேர்த்து சாலட்டாக சாப்பிட்டால் குறைவான கலோரியை பெறுவதுடன், உடல் எடையை குறையும்.
- இவ்வாறு மினி உணவுகளை 3 மணிநேரம் இடைவெளி விட்டு எடுத்துக்கொண்டால் உடல் எடை குறைவதுடன், நீங்கள் நினைத்த உணவுகளையும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.