இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை முதல் முறையாக சீனாவை கடந்துள்ளது. 

அதனடிப்படையில் இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,200 ஆக பதிவாகியுள்ளதுடன் அது தற்போது சீனாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களை விட அதிகமானது என தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையில் இதுவரையில் 86,759 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 2,895 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 546 பேர் உயிரிழந்துள்ளது. 

சீனாவில் இதுவரையில் 90,106 தொற்றாளர்கள் இனங்காப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 85,309 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.