நெல்லிக்காயில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது.
நெல்லிக்காயில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன.
அதில் சர்க்கரை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகையால் இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இது பொதுவாக நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது.
எடையைக் குறைக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும். ஒரு சிறந்த காலை பானத்துக்கு ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது பல ஆரோக்கிய காரணங்களுக்காக சிறந்தது. முதலில் இது சரும பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.
சேதமடைந்த செல்களை சரிசெய்கிறது. நல்ல சரும ஆரோக்கியத்தை வழங்குகிறது. எடை இழப்புக்கு ஒரு சிறந்த பானமாகும்.
ஆரோக்கிய நன்மைகள்
துரிதமான உடல் எடை இழப்பு
மேம்படுத்தப்பட்ட செரிமானம்.
குடல் வீக்கம், குடல் இயக்கம் போன்றவற்றை நிர்வகிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
சிறந்த சரும ஆரோக்கியம்.
நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறையும்.
எடை இழப்பு
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
நெல்லிக்காய் சாறு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது.
இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும்.
செரிமானத்திற்கு உதவுகிறது
எந்த வகையான செரிமான ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தாலும், அம்லா ஜூஸ் குடித்து நாளைத் தொடங்குங்கள்.
நெல்லிக்காய் சாறு ஒரு இயற்கை மலமிளக்கி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை போக்கவும் உதவும்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாமருந்தாக இருக்கும்.
சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
நெல்லிக்காய் சரும ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் நெல்லிக்காய் சாறு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நெல்லிக்காய் சாறு ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலமாகும்.
சரும செல்களின் சேதம் மற்றும் தோல் சுருக்கங்கள் இரண்டும் வைட்டமின் சி மூலம் தடுக்கப்படுகிறது.
வீக்கத்திற்கு சிறந்தது
இதய நோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற எந்தவொரு நாள்பட்ட நோய்களாலும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் நாளை ஒரு ஆம்லா ஜூஸ் மூலம் தொடங்க முயற்சிக்கவும்.
ஆம்லா ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் முழுவதும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி ஊட்டசத்தின் நல்ல மூலமாகும்.
இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது. வைட்டமின் சி உடலின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
இது தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது.