இன்று பலருடைய புலம்பல்களுக்கும் டென்ஷனுக்கும் முக்கிய காரணம் யாரும் நான் சொல்வதை கேட்டுப்பதில்லை நான் என்ன செய்தாலும் யாரும் என்னை பாராட்டுவதில்லை என்பதுதான். கரும்பு செடி நட்டுவைத்து  மிளகாய் காய்த்ததாக சரித்திரம் இல்லை.

எப்போதும் நல்லதோ கெட்டதோ எதை விதைக்கின்றோமோ அதை மாத்திரமே அறுவடை செய்ய முடியும். நாம் நேராக நின்றுக்கொன்று பூக்களை மேல் நோக்கி வீசினால் பூக்கள் நம் மீது வந்து விழும் மாறாக கற்களை வீசினால் கற்கள் நம் மீது விழும்.

மேல் நோக்கி வீசப்படும் போது இரண்டும் ஒரே மாதிரியான உணர்வையே தரும். ஆனால் அது நம்மை நோக்கி திரும்பும் போதுதான் நாம் வீசிய பொருளின் உண்மையான தன்மை புரியும். பூக்கள் நம் மீது விழும் அனுபவமும் கற்கள் நம் மீது விழும் அனுபவமும் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை.

நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் அடிப்படையில் இவ்வுலகில் ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் காணப்படுகிறது.

இந்த விதி விசைக்கு மாத்திரமன்றி நமது செயல்களுக்கும் பொருந்தும். எப்போது நமது சுட்டுவிரல் ஒருவனை காட்டிக்கொடுக்க முற்படுகிறதோ அப்போது நம் கையில் ஏனைய மூன்று விரல்களும் நம்மை சுட்டிக்காட்டுகின்றன.

உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? இதை கட்டாயம் செய்க | Article About Karma

மனிதர்கள் எப்போதும் தன்னிடமுள்ள குறைகள் குறித்து சிந்திப்பதே இல்லை. இதுவே மனிதனின் உளவியல்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இவ்வுலகில் குறை கூறுவதை போன்ற சுலபமான காரியமும் கிடையாது, அவ்வாறு கூறாமல் இருப்பது போன்ற கடினமான காரியமும் கிடையாது.

ஒவ்வொருவரும் பலமுறை முயற்சித்து பல போராட்டங்களையும், தடைகலையும் தாண்டி ஒரு செயலை செய்கின்றார்கள்.

ஆனால் அதனை உலகம் மிகவும் எளிதாக குறைகூறிவிட்டு போகிறது. இதற்கு சிறந்த உதாரணம் சினிமா படங்கள் தான்.

சினிமா இயக்குனர்கள் பல கோடி ரூபாய் பணத்தை செலவு செய்து வருடக்கணக்கில் நேரத்தை செலவிட்டு ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கு சென்று மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு சினிமா படத்தினை திரைக்கு கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அதை நாம் வெறும் மூன்று மணிநேரம் பார்த்துவிட்டு ஆயிரம் குறைகள் கூறுகின்றோம். அந்த படத்தினை திரைக்கு கொண்டு வருவதற்கு பின்னால் எத்தனை பேரின் கடின உழைப்பு இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை.

உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? இதை கட்டாயம் செய்க | Article About Karma

இதுபோன்று தான் ஒவ்வொரு மனிதனும் தாம் செய்யும் காரியங்களை தவிர ஏனைய அனைத்தையும் பற்றி குறை கூறுவது வழக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை.

மற்றவர்களின் செயல்களில் எல்லாம் குறை காணும் நாம், நாம் செய்யும் செயல்களுக்கு மாத்திரம் மற்றவர்களின் பாராட்டும் பரிசில்களும் கிடைக்க வேண்டும் என நினைப்பது எப்படி நியாயமாகும்?

முதலில் மாற்றவர்களின் செயல்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள், அதன்பின் உங்களின் செயல்களை மற்றவர்கள் தானாக பாராட்டுவர்கள்.

மற்றவர்களுக்கு நல்ல செயல்களை செய்தீர்களானால் மற்றவர்களின் நல்ல செயல்களை பாராட்டினீர்களானால் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அது சுவரில் எறியப்பட்ட பந்தை போல திரும்பி வரும் என்பது மெய்.