தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.