பொதுவாக நாம் 3 வேளைகளில் ஏதாவது ஒரு வேளை சரி புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என நினைப்போம். நாம் தெரிவு செய்யும் உணவுகள் நேரத்திற்கு ஏற்றால் போல் மாற வேண்டும்.
புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளை இரவு வேளைகள் எடுத்து கொள்ளக் கூடாது. என பலரும் பேசுவார்கள்.
இதற்கு என்ன முக்கிய காரணம் என்றால்? புரோட்டின் அதிகமாகவுள்ள உணவுகளை இரவு வேளைகளை உட்க் கொண்டால் எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது.
நாளடைவில், சில உணவுகள் நமது தூக்கம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
அந்த வகையில் இரவு நேரங்களில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. தயிர்
தயிர் சாப்பிடுவதால் பாக்டீரியாக்கள் செரிமானத்தை கவனித்துக் கொள்வதுடன் எலும்புகளை பலப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
அதிகமான குளிர்ச்சிக் கொண்ட உணவுகளில் தயிரும் ஒன்று. இதனால் வயிற்றில் சளி போன்ற பாரியளவிலான பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றன.
2. சிக்கன்
சிக்கனில் அதிகமான புரதம் இருக்கின்றது.இதனால் இது செரிமானத்திற்கு செல்ல அதிகப்படியான நேரம் இருக்கும். இதனால் உங்களின் தூக்கம் தள்ளிப்போகும். அப்படியும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும் என கட்டாயம் இருந்தால் அளவாக சாப்பிடலாம்.
3. உலர் பழங்கள்
உலர் பழங்களில் அதிகப்படியான கார்போஹைட்ரேட், சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன, இதனை இரவில் சாப்பிடுவதை விட காலையில் சாப்பிடுவது சிறந்தது.
இரவில் சாப்பிட்டால், வயிற்று நொதிகளால் அவற்றை உடைக்க முடியாது. இதன் காரணமாக செரிமானம் தடைப்பட்டு தூக்கத்தை பாதிக்கும்.