ஒருவருடைய பிறப்பு ராசியானது இவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் துரோக்கிகளை பழிவாங்குவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம். இவர்கள் ஒருவரை வெறுக்க ஆரம்பித்தார்கள் என்றால், மிகவும் கொடூரமாக பழிவாங்குவார்களாம்.
அப்படி தங்களுக்கு பிடிக்காதவர்களிடடும் துரோகிகளிடமும் ஒட்டுமொத்த வெறுப்பையும் காட்டும் இரக்கமற்ற ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ராசிக்காரர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் வலி தங்களுக்கு ஒரு கவலையாக இல்லை என்று பாசாங்கு செய்யலாம், ஆனால் அது உண்மையல்ல. இவர்களுக்கு வலி கொடுத்தவர்களை இவர்கள் வாழ்வில் ஒருபோதும் மறப்பது கிடையாது.
தக்க சமயம் பார்த்து இவர்கள் இரக்கமின்றி பழிதீர்ப்பார்கள்.இவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்மார்களோ அதை விட பல மடங்கு வலியை திருப்பி கொடுக்கும் குணம் இந்த ராசியினரிடம் நிச்சயம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் மென்மையான மற்றும் எளிமையான ராசிக்காரர்கள். ஆனால் உண்மையில் ஒரு உக்கிரமான இதயத்தைக் கொண்டுள்ளனர்.
இயல்பாகவே இவர்கள் உண்மைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மற்றவர்கள் தங்களுக்கு துரோகம் செய்தாலும் இவர்கள் கடைசிவரையில் உண்டமையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் இவர்களில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாமல் ஓயமாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் பிரச்சினைகளைச் சமாளிக்க இந்த சற்று ஆக்ரோஷமான தயார்நிலையில் இருப்பது அவர்களை ஜோதிட உலகின் மிகவும் வலிமையான பிரதிநிதிகளில் ஒருவராக ஆக்குகிறது.
இவர்கள் எப்போதும் மூடிய இதயத்துடனும், நிகழ்வுகளுக்கு குளிர்ச்சியான எதிர்வினைகளுடனும் தடைகளை எதிர்கொள்கிறார்கள், பெரும்பாலும் இவர்களை எரிச்சலூட்டும் விடயங்களை அசால்டாக கையாளும் ஆளுமை இவர்களிடம் இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் பாதிக்கப்பட்டவராக அல்ல, வெற்றியாளராக இருக்க தேவையான வலுவான ஆளுமை கொண்டவர்கள். இவர்கள் பழிவாங்க நினைத்தால் எதிரியின் வாழ்வில் நரகத்தை காட்டிவிடுவார்கள்.