இந்தியாவில் கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் கேரள பொலிஸார் சார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் வலைத்தள பதிவில்,
”வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்; மாவட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்; எனது எண்ணங்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சுற்றியே இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Deeply saddened by the tragic jeep accident that took the lives of many tea plantation workers in Mananthavady, Wayanad.
— Rahul Gandhi (@RahulGandhi) August 25, 2023
Have spoken to the district authorities, urging a swift response. My thoughts are with the grieving families. Wish a speedy recovery to those injured.