மொரட்டுவை - அங்குலான வடக்கு மற்றும் தெற்கு ஆகிய கிராம சேவகர் பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தில் கந்தானை மற்றும் மஹாபாகே காவல்துறை அதிகார பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குருநாகல் மாநகர சபை பகுதியில் இலிப்புகெதர, கடவீதிய கிராமசேவகர் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் குளியாபிட்டி காவல்துறை அதிகார பகுதியில் கலகெதர, ஹம்மலவ, இஹல கலுகோமுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.