ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத அமாவாசை முடிந்த பின் வரும் வளர்பிறை பௌர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் 25ஆம் திகதி அன்று வரலக்ஷ்மி விரதம் வருகிறது.

ஆகஸ்ட் 25 வரலக்ஷ்மி விரதம்; பெண்கள் மறக்காமல் கடைப்பிடியுங்கள்! | August 25 Varalakshmi Vratham Spritualவரலக்ஷ்மி விரத பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் விக்கினங்களை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும். அதற்க்கு ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்க்கு குங்குமம் வைத்து, விநாயகருக்கு பிடித்த அருகம்புல் வைத்து அவரை வழிபட வேண்டும்.

வரலட்சுமி விரதம், மகாலட்சுமி விரதம், அஷ்ட லட்சுமி விரதம் என பல பெயர்களில் அழைக்கப்படும் வரலட்சுமி விரதம், ஸ்ரவண மாதத்தில் வரும் முக்கியமான விரதங்களில் ஒன்றாகும்.

ஆகஸ்ட் 25 வரலக்ஷ்மி விரதம்; பெண்கள் மறக்காமல் கடைப்பிடியுங்கள்! | August 25 Varalakshmi Vratham Spritualசெல்வங்களுக்கு அதிபதியான மகாலட்சுமியின் அருள் கிடைப்பதற்காக ஆண்கள், பெண்கள் என அனைவரும் இந்த விரதத்தை இருக்கலாம்.

வரலக்ஷ்மி விரதம் கடைபிடிக்கபடுவதின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தன கணவன் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும், வீட்டில் எல்லா செல்வங்களும் நிறைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபடுவதாகும். வரலக்ஷ்மி விரதத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற நியதிகள் கிடையாது.

ஆகஸ்ட் 25 வரலக்ஷ்மி விரதம்; பெண்கள் மறக்காமல் கடைப்பிடியுங்கள்! | August 25 Varalakshmi Vratham Spritual

 உள்ள தூய்மை, உண்மையான இறை பக்தி இருக்கும் அனைவரும் இவ்விரதத்தை மேற்கொள்ள தகுதியானவர்கள் தான்.

வரலக்ஷ்மி விரதத்தை திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று விரதத்தை கடைபிடிக்கலாம்.

சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதம் இருப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

ஆகஸ்ட் 25 வரலக்ஷ்மி விரதம்; பெண்கள் மறக்காமல் கடைப்பிடியுங்கள்! | August 25 Varalakshmi Vratham Spritualதீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். மன அமைதி கிடைப்பதுடன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இந்த நாளில் மகாலட்சுமிதய வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து, எப்போதும் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.