கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால் இந்த கனவுகள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

அதிலும் இந்தக் கனவுக் கண்டால் இப்படி நல்லது நடக்கும் இந்த கனவுகள் கண்டால் தீமைகள் வந்து சேரும், சிலவை உங்களை எச்சரிக்கை கொடுப்பதாகவும் இருக்கும் என பல கதைகள் எம்மிடம் தோன்றுவதுண்டு.

அந்தவகையில் கனவில் விபத்து ஏற்படுவது போல கனவுகள் வருவதற்கான காரணம் அவ்வாறு வந்தால் என்னென்ன பலன்கள் என்று பலருக்கும் பல விதமான கேள்விகள் இருக்கும். உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இதோ,

உங்கள் கனவில் விபத்து வந்தால் நிதி இழப்பை சந்திக்கப் போகிறீர்கள், உங்கள் வருமானம் குறைந்துக் கொண்டு வரும் என்று அர்த்தம்.

கனவில் பைக் விபத்தைக் கண்டால் உங்கள் நெருக்கமானவர்களுடன் சண்டை ஏற்படும் என்று அர்த்தம். மேலும், இந்தக் கனவுகள் உங்களை எச்சரிக்கும் வகையில் தான் இருக்கும்.

கனவில் கார் விபத்து ஏற்படுவது போல கண்டால் திடீரென உடல்நலக் குறைவு ஏற்படும் என்று அர்த்தம். கார் விபத்தை கனவில் கண்டுக் கொண்டிருந்தால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

உங்களுக்கு வரும் கனவில் வேறொருவருக்கு விபத்து ஏற்படுவது போல கனவு வந்தால் அது மிகவும் மோசமானதாகும். உங்களுக்கு அப்படியொரு கனவு வந்தால் புதிய வேலைகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். வழக்கு சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரும்.