கொழும்பில் சுகாதார நடைமுறைகளை மீறிய நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக விலகலை பின்பற்ற தவறியமைக்காக 300 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே 300 பேருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த இருவரையும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த நபர்களுக்கு எதிராக முகக்கவசம் அணியாமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அஜித் ரோஹண கூறியுள்ளார்.