இன்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அனைவரையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வாட்ஸ்அப்பில் அழிந்து போன வாட்ஸ்அப் உரையாடலை எப்படி மீட்பது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
WhatsApp Open செய்து கொள்ளவும். திரையின் வலது புறத்தில் மேல் மூலையில் இருக்கும் ஐகானில் செட்டிங்ஸை தெரிவு செய்யவும்.
இதில் Chat என்பதை அளுத்தி, பின்பு Chat Backup இதற்குள் செல்ல வேண்டும். இதில் தினசரி மற்றும் வாரம், மாதாந்திர பிரதி என்பதை கேட்கும். தங்களுக்கு தேவையான காலத்தினை அழுத்தி நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப்பில் நீங்கள் வாரம் சாட் பேச்கப் எடுக்க வேண்டும் என்றால் வாரம் என்பதை தெரிவு செய்ய வேண்டும். பின்பு உங்களது கூகுள் கணக்கையையும் தெரிவு செய்யவும்.
வாட்ஸ்அப்பில் பகிரப்படும் வீடியோக்களை காப்புப் பிரதி எடுக்க விரும்பினால், 'வீடியோக்களை உள்ளடக்கு' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். வீடியோக்களைச் சேர்ப்பது விருப்பமானது.
இந்த அனைத்து Google இயக்கக அமைப்புகளையும் நீங்கள் நிர்வகித்து முடித்ததும், பச்சை நிறத்தில் உள்ள ‘பேக் அப்’ ஐகானைத் தட்டவும்.
இது நீங்கள் தேர்ந்தெடுத்த கூகுள் டிரைவ் கணக்கில் உங்களின் முழுச் செய்திகளையும் பதிவேற்றும் அல்லது சாட் பேக்கப் எடுத்துக் கொள்ளலாம்.