டுவிட்டரின் சின்னமான பறவை சின்னத்தை மாற்றி எலான் மஸ்க் X என்ற சின்னத்தினை அறிவித்துள்ளார்.

டுவிட்டரின் அதிபதியாக இருக்கும் எலான் மஸ்க் இந்த டுவிட்டர் ஊடக தளத்தை கடந்த ஆண்டு $44 பில்லியனுக்கு வாங்கினார். இதனை வாங்கிய நாளிலிருந்து தற்போது வரை பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

பொதுவாக டுவிட்டர் பக்கத்தின் சின்னமாக நீல நிற பறவை சின்னமே காணப்பபடும். ஆனால் இந்த சின்னத்தை எடுத்துவிட்டு, X என்ற சின்னத்தினை வைத்துள்ளார். 

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி, லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

"இது விதிவிலக்காக அரிதான விஷயம் - வாழ்க்கையிலோ அல்லது வியாபாரத்திலோ - மற்றொரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்," என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

டுவிட்டரில் பறவை சின்னத்தை அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்... காரணம் என்ன? | Elon Musk Replace Twitter Logo X SymbolX Corp என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் Twitter இனி தனி நிறுவனமாக இருக்கப் போவது இல்லை என்றும், முக்கிய நபர்களுக்கு ஃப்ளு டிக் கொடுக்கப்பட்டதை தற்போது மாற்றி சந்தா கட்டினால் மட்டுமே ப்ளூ டிக் என்று அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.

இது மட்டுமில்லாமல் பல அறிவிப்பையும் கொடுத்து வருகின்றது. ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களை வைத்திருக்கும் டுவிடடருக்கும் மெட்டாவுக்கு கடும் போட்டி நடைபெற்று வருகின்றது.

தற்போது ட்விட்டர் URL x.com twitter.com க்கு திருப்பி விடப்படுகிறது, மேலும் வரும் நாட்களில் தளத்தின் மாற்றம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.

டுவிட்டரில் பறவை சின்னத்தை அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்... காரணம் என்ன? | Elon Musk Replace Twitter Logo X Symbolஆனால் எலான் மஸ்க் ட்விட்டரை வைத்து விளையாடுவது இது முதல் முறை அல்ல என்பதால் மக்கள் மத்தியில் இவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சந்தா செலுத்தாத பயனர்கள் அனுப்பப்படும் செய்திகளில் எண்ணிக்கை வரம்பு வைக்கப்போவதாகவும் கூறியுள்ளார். அதிக செய்திகளை அனுப்ப இன்றே சந்தா கட்டவும்”  என்றும் ட்வீட் செய்துள்ளது.