நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை சரியாக உட்கொள்கிறோமா என்பதை அடிக்கடி சோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
பொதுவாக ஏதேனும் உடல்நிலை பிரச்சினை என்றால் மருத்துவர்களிடம் சோதனைக்கு செல்லாமல் தனக்கு தெரிந்த வகையில் பலரும் மாத்திரைகளை வாங்கி போட்டுவிடுகின்றனர்.
இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். மருந்து மாத்திரை உட்கொள்வதில் கட்டாயம் விழிப்புணர்வு தேவை. ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் மக்கள் தவறான முறையில் மாத்திரைகளை உட்கொண்டு பாதிக்கப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
பொதுவாக உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வியாதி இருப்பின், அந்த வியாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை மொத்தமாக ஒரே நேரத்தில் உட்கொள்வது தவறாகும். இவை பாரிய பிரச்சினையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
அதே போன்று மருந்தகங்களில் சென்று தானே மாத்திரை போட்டுக்கொள்வதும் பிரச்சினையில் முடியும். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தான் மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டும்.
மருத்துவர்கள் கூறிய அளவினை விட அதிகமாக நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை அதிக சோர்வையும், தலைசுற்றல் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
அடிக்கடி வரும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மருந்தகங்களில் மருந்து வாங்கி சாப்பிடுவது சில தருணங்களில் இறப்பு வரை கொண்டு செல்லுமாம்.
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை உயிரை பாதுகாக்கின்றது என்பதை மறந்து, எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம்.
மாத்திரைகளை சாப்பிட உடனேயே உட்கொள்வது கூடாது. ஏனெனில் இவை தவறான காம்பினேஷனாக இருப்பதுடன், ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரையை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்த பின்பே சாப்பிட வேண்டும்.
மற்றவர்களின் மாத்திரைகளை போடுவதை தவிர்க்க வேண்டும். ஒரே அறிகுறியாக இருந்தாலும், வீரியம் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆதலால் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை மற்றவர்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.