நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.
ஆனால் பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இங்கு அதுகுறித்து விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.
- நீரிழிவு நோயாளிகள் பூண்டை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் பூண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்குமாம்.
- அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் கார உணவுகள், மற்றும் பூண்டை உணவில் சேர்க்கக்கூடாது.
- இதே போன்று கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது. ஏனெனில் நச்சை அதிகரிக்குமாம்.
- பூண்டில் சல்பர் காரணமாக அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
- பச்சை பூண்டை சாப்பிட்டால் சிலருக்கு தலைவலி பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதிகமான பூண்டை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சினையை ஏற்படலாம்.
- தோல் அலர்ஜி இருப்பவர்கள், தோலில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது.