பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் மாரடைப்பு குறிப்பிட்ட ஒரு நாளில் அதிகமாக வருவது தெரியவந்துள்ளது.

சமீப காலமாக மாரடைப்பு என்பது பலருக்கும் வந்து உயிரை பறித்து வருகின்றது. ஆனால் இவை ஒருகுறிப்பிட்ட நாளில் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பல நாடுகளில் விடுமுறையாக காணப்பட்டு, திங்கள் வேலையை தொடங்கும் தினமாக இருக்கின்றது. இதுதான் மாரடைப்பிற்கு பெரும் காரணமாக இருக்கின்றதாம்.

பிரிட்டன் அயர்லாந்தில் இருக்கும் பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனத்துடன் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் கல்லூரி சேர்ந்து ஆய்வு செய்ததில், உலகம் முழுவதும் 10 ஆயிரம் இதயநோயாளிகளை கண் காணித்துள்ளனர்.

இதில் திங்கள் கிழமையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற மன அழுத்தம் பெரும்பாலான நபர்களுக்கு எழுந்துள்ளது. இந்த அதிகமான மனஅழுத்தத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவும், உயர் ரத்த அழுத்தமும் அதிகமாகி இதய பாதிப்பினை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த கிழமைகளில் மாரடைப்பு அதிகமாக வருமா? மக்களே உஷார் | Link Monday And Serious Heart Attacks Riskஅதாவது அலுவலக வேலையினை அலுவலகத்திலும், வீட்டு காரியங்களை வீட்டிலும் வைத்துவிட வேண்டும். இரண்டையும் தனித்தனியாக கையாளும் தன்மை உங்களுக்குள் நிச்சயம் இருக்க வேண்டும்.

மேலும் போதுமான உடற்பயிற்சி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தால் மனஅழுத்தத்தினை குறைக்கலாம்.

திங்கள்கிழமை வந்துவிட்டால் வேலைக்கு செல்ல வேண்டும், என்ன எண்ணத்தினை மனதிற்கு கொடுத்து அதனை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.