ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.

இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரையானது பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்தக் கீரையைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் பெக் செய்தால் முடி வளர்ச்சி அடையும்.

முதலில் முடக்கத்தான் கீரையை தண்ணீர் சேர்த்து அலசி சுத்தம் செய்து விட்டு 2 கரண்டு வெத்தயந்தை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவிடவேண்டும்.

பிறகு சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையையும், ஊறவைத்த வெந்தயத்தையும் சேரத்து அதில் கொஞ்சமாக தயிரையும் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அரைத்து எடுத்துக் கொண்ட கலவையை பருத்திதுணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றில் கரிசலாங்கண்ணி பவுடரை உரு கரண்டி சேர்த்து அதில் விளக்கெண்ணெய் ஒரு கரண்டியும் சேர்த்து கலந்துக் கொண்டால் ஹேர் பெக் தயார்.

இந்த ஹேர் பெக்கானது உங்களது முடிக்கு அதிக வளர்ச்சியைக் கொடுக்கும்.

கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர முடக்கத்தான் கீரை

முடியையும் கருமை ஆக்கும். இந்த ஹேர் பெக்கை தலைமுடிக்கு போடுவதற்கு முன்பு தலையில் இருக்கும் சிக்குகளை எடுத்து விட்டு தேங்காய் எண்ணெய் வைத்து தலைமுடியை நன்றாக சீவி விட்டு தயார்ப்படுத்தி வைத்திருக்கும் ஹேர் பெக்கை தலைமுடியின் அடிவரை நன்றாக மசாஜ் செய்யவும்.

20 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை தலையில் ஹேர் பெக் ஊறியதும் சாம்பு போட்டு குளித்தால் தலைமுடியின் வளர்ச்சியைப் பார்க்கலாம். இந்த ஹேர் பெக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் 3 மாதங்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.