ஜோதிட சாஸ்த்திரங்களில் கூறப்பட்டது போன்று கிரகங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும்.

இப்படி மாற்றங்கள் ஏற்படும் பொழுது அதன் தாக்கம் 12 ராசியினருக்கும் இருக்கும். ஆனால் அதில் குறிப்பிட்ட சிலர் மாத்திரமே நன்மை அடைகிறார்கள்.

முதன்மை கிரகமாக பார்க்கப்படும் சுக்கிரன் தன்னுடைய நிலையில் இருந்து அசையும் சமயத்தில், ராசிகளின் வாழ்க்கையில் அமோகமான பல மாற்றங்கள் ஏற்படும். ஏனெனின் சுக்கிரன், திருமணம், ஆடம்பரம், காதல் மற்றும் செல்வம் நிதிநிலை மாற்றங்கள் ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ளார்.

சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றிக் கொள்வார்கள். அதே போன்று 13-14 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரங்களையும் மாற்றுவார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் தனுசு ராசிக்கு பெயர்கிறார். டிசம்பர் 20 ஆம் தேதி, சுக்கிரன் மூல நட்சத்திரத்தில் பெயர்கிறார். அதன்பின்னர், டிசம்பர் 30 ஆம் தேதி பூராட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவார்.

இந்த பெயர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில், முன்னேற்றம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் நினைப்பதை விட அதிகமாக கிடைக்கும். அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.      

இன்னும் 30 நாட்களில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. சிக்கலில் மாட்டியவர்களுக்கு விடுதலை | Venus Transit In Nakshatra Give Lucky Zodiac Signs

1. மிதுன ராசியினர்

  • மிதுன ராசியில் பிறந்தவர்க்ள சுக்கிரன், பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது அவர்களின் முயற்சிகள் பன்மடங்கு அதிகரிக்கும்.
  • நினைத்து வைத்திருந்த காரியங்கள் அனைத்து கைக்கூடும்.
  • வேலையில் பணி முன்னேற்றம் கிடைக்கலாம்.
  • உங்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் சரி வரும். 

2. தனுசு ராசியில் பிறந்தவர்கள்

  • தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி அடையும் பொழுது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் சரி வரும்.
  • புதிய ஆதாயங்கள் மற்றும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
  • நீண்ட கால குடும்ப பிரச்சினைகள் சுக்கிரன் பெயர்ச்சி அடையும் பொழுது தீர்ந்து விடும்.
  • மனக்கஷ்டங்கள் இருந்தால் இந்த காலப்பகுதியில் சரியாகி விடும்.

3. மேஷ ராசியில் பிறந்தவர்கள்

  •  சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி ஏற்படும் சமயத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் பல நடக்கவுள்ளது.
  • மகிழ்ச்சியுடன் காத்திருப்பவர்களுக்கு இந்த காலப்பகுதியில் வெற்றி கிடைக்கும்.
  • தொழில் வளர்ச்சி, பணக்கஷ்டங்கள், மனக்கசப்புகள் ஆகிய அனைத்தும் இந்த காலப்பகுதியில் சரியாகிவிடும்.