திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிப்போருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு டிவிப்பெட்டி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். அதனால் எல்லா வீட்டிலும் சீரியல் நடிகர், நடிகைகளின் முகம் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது.
அந்தவகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் அறிமுகம் ஆனவர் கிருத்திகா. தொடர்ந்து செல்லமே, வம்சம், கண்மணி என பல சீரியல்களிலும் நெகட்டிவ் ரோல் செய்தார். இதேபோல் கலைஞர் டிவியில் மெகா ஹிட்டான மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருந்தார். இதேபோல் செல்லமே, முந்தானை முடிச்சு, ஆனந்தம் சீரியல்களிலும் நடித்திருந்தார்.
இவரது ஆஷ்டான பாகுவான உருவம் இவருக்கு பெரும்பாலும் நெகட்டிவ் ரோலையே வாங்கிக் கொடுத்தது. மெட்டி ஒலி சீரியலில் நடிக்கும் போது கிருத்திகா பத்தாம்வகுப்புதான் படித்தார். இவர் அருண்சாய் என்பவரை காதலித்துக் கல்யாணம் செய்தார். கிருத்திகா இப்போது பாண்டவர் இல்லம் என்னும் சீரியலில் நடித்துவருகிறார்.
கிருத்திகா எப்போது கொஞ்சம் குண்டாகவே இருப்பார். அண்மையில் அவர் எடைபார்த்த போது 86 கிலோ இருந்தார். உடனே தன் உணவு, டயட், ஜிம் என சில முயற்சிகள் செய்து இப்போது உடல் எடையை 63 கிலோவாக குறைத்திருக்கிறார்.உடலைக் குறைத்த கையோடு அவ்வப்போது வீடியோவும் போட்டு அசத்துகிறார். இப்போது சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் நடிகை கிருத்திகா தனது தொடையழகு தெரிய செம கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் பெண்ணா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.