உலக அளவில் புதிதாக 2 லட்சத்து 17ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பெருந்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்தை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் ஒரே நாளில் 5ஆயிரத்து400 பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 5லட்சத்து 81ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 43 ஆயிரம் பேர் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிலும் ஒரே நாளில் 10ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் ஆயிரத்து341 பேரும், அமெரிக்காவில் 935 பேரும், மெக்சிகோவில் 485 பேரும் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 78லட்சத்து 47ஆயிரமாக அதிகரித்துள்ளது.