தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் தன் பயணத்தை தொடங்கியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை குரு தனது இடத்தை மாற்றி கொள்வார்.
தற்போது மே 1ஆம் தேதி நுழைந்த குரு, இனி அடுத்த வருடம் தான் தன் மாற்றத்தை நிகழ்த்துவார். இந்த நிலையில் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வியாழன் ரிஷப ராசியில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
வியாழன் பெயர்ந்த உடனேயே சில ராசிகளுக்கு குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனால் சில ராசிகளுக்கு அடுத்த வருடம்அதாவது 2025 வரை பண பிரச்சனையே இருக்காது. வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக இரு்கப்போகிறது. அந்த ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
- ரிஷபத்தில் வியாழன் சஞ்சரிப்பதால் உருவாகும் குபேர யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும்.
- தொழில் செய்யும் துறையில் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எதிபாராத வகையில் கிடைக்கும்.
- மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் குறைந்து அவர்களுக்கு பிடித்ததை செய்வீர்கள்.
- வியாழனின் உங்கள் பக்கம் சாதகமான செல்வாக்கினை செலுத்துவார் இதனால் உங்கள் நிதி நிலையும் மேம்படும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முன்னர் இருந்த பணப்பிரச்சனை விலகி சந்தோஷமாக இருப்பீர்கள்.
கன்னி
- கன்னி ராசிக்கு வியாழன் சஞ்சரிப்பதால் குபேர யோகம் பலமான செல்வத்தை தரப்போகின்றது.
- நீங்கள் இடைநிறுத்திய பணி மீண்டும் தொடங்கும்.
- உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற பல முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு இந்த நேரம் ஏற்றது.
- நீங்கள் சிறப்புடன் மகிழ்ச்சியாக இருக்க பல விஷயங்களை உங்களுக்கு குபேர யோகம் பெற்று தரும்.
- வேலை சம்பந்தமான வெளியூர் பயணம் கூடும். இந்த நேரத்தில் வாகனத்தை கவனமாக செலுத்த வேண்டும்.
- உங்கள் சொந்தஙகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைப்பதோடு அவர்கள் சந்தோசமான செய்திகளையும் கொண்டு வருவார்கள்.
- பணத்தில் எந்த குறையும் இல்லாமல் ஏதாவது ஒரு வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும்.
ரிஷபம்
- மகிமையின் அதிபதியான வியாழன் ரிஷப ராசியில் நுழைகிறார்.
- இதன் விளைவாக உங்களுக்கு குபேர யோகம் சிறந்த பலனை பெற்று தரும். நிதிநிலை சிறப்பாக அமோகமாக இருக்கும்.
- இருந்தும் இந்த நேரத்தில் அதிக செலவுகள் இருக்கும். ஆனால் பணத்திற்கு குறை இருக்காது.
- உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- புதிய பணிகளை தொடங்குவது சாதகமாகும். திருமண வாழ்க்கை இனிமையாக மகிழ்ச்சியாக இருக்கும்.