ஜப்பான் நாட்டு உணவகங்களில், உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களை வரிசையாக அடுக்கும் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்த சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Telexistence நிறுவனத்தால் கங்காரூக்களைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களுக்கு, உணவகம்  மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் பலத்த வரவேற்பு உள்ளது. இதுவரை 6 லட்சம் ரோபோக்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தாக்கத்தால், பல நிறுவனங்கள் மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை பணியில் அமர்த்த விரும்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருங்காலத்தில், மருத்துவர்கள் வீட்டில் இருந்தவாறே, மருத்துவமனையில் உள்ள ரோபோக்களை இயக்கி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு ரோபோக்களின் திறனை மேம்படுத்த உள்ளதாக Telexistence நிறுவனம் அறிவித்துள்ளது.