உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் குணமடைந்தனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 60 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 35 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 80 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:- அமெரிக்கா - 1,78,594 ஸ்பெயின் - 1,48,558 இத்தாலி - 81,654 பிரான்ஸ் - 50,784 ஜெர்மனி - 1,32,700 ரஷியா - 18,095 துருக்கி - 63,151 பிரேசில் - 42,991 ஈரான் - 78,422 சீனா - 77,766 கனடா - 24,908 பெல்ஜியம் - 12,378 பெரு - 13,550 இந்தியா - 11,707 சுவிட்சர்லாந்து - 24,500 மெக்சிகோ - 13,447 அயர்லாந்து - 13,386 சிலி - 10,041 ஆஸ்திரியா - 13,228
கொரோனாவில் இருந்து 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் மீட்பு
- Master Admin
- 04 May 2020
- (467)
தொடர்புடைய செய்திகள்
- 03 February 2025
- (274)
மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்ப...
- 04 May 2020
- (554)
கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வ...
- 11 October 2024
- (184)
காலையில் உணவாக எதை சாப்பிட வேண்டும்? ஆனா...
யாழ் ஓசை செய்திகள்
ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!
- 31 January 2026
தாமதமாகும் ரயில் சேவைகள் ; மக்களுக்கு வெளியான அறிவிப்பு
- 31 January 2026
சினிமா செய்திகள்
பிக்பாஸ் 9 பிறகு பிரஜன்-சாண்ட்ரா வெளியிட்ட அழகிய குடும்ப போட்டோ
- 31 January 2026
விஜய்யை பிளாக்மெயில் செய்யமுடியாது!! எஸ் ஏ சந்திரசேகர் காட்டம்..
- 31 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
