கொரோனா நோய் தொற்று பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து மக்கள் அதிகம் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துள்ளனர். வேறு வழியும் இல்லை, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் மக்களுக்கு அதுதான் பொழுதுபோக்காக இருந்தது.
இப்போது இந்தியாவில் இரண்டாம் அலை படு மோசமாக இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு லாக் டவுன் அறிவித்துள்ளார்கள்.
இரண்டு வாரங்கள் இந்த லாக் டவுன் கடைபிடிக்க உள்ளது. இதனால் சீரியல்கள் படப்பிடிப்பு கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நேரத்தை கட்டுப்படுத்த விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் முன் டைட்டில் பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது.
ஒருசில சீரியல்களுக்கு 4 விளம்பரங்கள் எல்லாம் வருகின்றனவாம்.
கொரோனா லாக் டவுன் மேலும் தொடர்ந்தால் எல்லா சீரியல்களும் முன்பை போல நிறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளதாம்.
Corona Lock down - விஜய் ரிவி சீரியல்களில் ஏற்பட்ட மாற்றம்!
