சன் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்திற்கு நடித்து வரும் சத்யா தேவராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட போஸ்ட் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆதிரை.

சமீபத்தில் இவரை வைத்து தான் நாடகத்தின் கதைக்களத்தை கொண்டு சென்றிருப்பார்கள். இந்த நிலையில் ஆதிரை போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "வரும் நாட்களில் நான் புது ப்ரஜெக்ட்டில் நடிக்க விரும்புகிறேன். ஏற்கனவே என்னை தொடர்பு கொண்டவர்கள், நல்ல ஸ்க்ரிப்ட் கொண்டவர்கள் என்னை மெயில் மூலம் அணுகலாம்" என குறிப்பிட்டு இருந்ததுன.

இதை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து நீங்கள் விகிறீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு ஆதிரை என்ற கத்யா தேவராஜன் பதில் அளித்தள்ளார்.

"யூடியூபுக்கு கன்டென்ட் கொடுக்காதீங்க  இப்போது வரை நான் விலகவில்லை. அப்படி விலகுவதனால் தெரிவிக்கிறேன்"என வெளிப்படையாக கூறியிருந்தார்.

எனவே அவர் சீரியலில் இருந்து விலகவில்லை என தெரியவந்துள்ளது. விரைவில் சத்யா தேவராஜை வேறு ஒரு சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் எதிபார்க்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகுகிறாரா ஆதிரை ? அவரே கொடுத்த விளக்கம் | Ethirneechalsathya Devarajaninsta Created Lots