இந்திய வம்சாவளியில் பிறந்திருந்தாலும், அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். பாலிவுட்டில் கால்பதித்த சன்னிலியோனுக்கு கவர்ச்சி ஏரியா கைகொடுத்தது. இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் சன்னிலியோன்.
தமிழில் ஜெய் நடித வடகறி படத்தில் சன்னிலியோனுக்காகவே ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. அதற்கு அவரே நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்திருந்தார். வடமாநிலங்களில் சன்னிலியோன் படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பவே அவர் தென்னிந்திய திரையுலகப் பக்கம் பயணிக்க தொடங்கியுள்ளார்.
சரித்திர பின்னணி கொண்ட வீரமா தேவி என்ற படத்தில் பல எதிர்ப்புகளையும் தாண்டி நடித்துவரும் சன்னிலியோன் புதிய படங்களையும் ஒப்பந்தம் செய்து வருகிறார்.
அந்தவகையில் சிந்தனை செய் படத்தின் இயக்குனர் யுவன் இயக்கும் “ஓ மை ஹோஸ்ட்” என்ற படத்தில் சன்னிலியோன் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியுடன் காமெடி பேய் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னிலியோனுக்கு ஜோடியாக காமெடி நடிகர் சதீஷ் நடித்துவருகிறார்.
சன்னிலியோன் உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். பயணங்களில் இருக்கும்போது கூட சில கடுமையான வேலைகளை செய்வதன் மூலம் உடற்பயிற்சி இலக்குகளை பராமரிக்கிறார்.
அடிக்கடி இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சன்னிலியோன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பத்தே மணி நேரத்தில் பத்து லட்சம் லைக்குகளை குவித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.