சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதியளிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் தீர்மானித்திருந்தார்.
எனினும், கொரோனா வைரஸ் குறித்த விபரங்களை மூடி மறைத்ததாகவும் ஹொங் கொங் மீது தனது அதிகாரத்தை வரம்பு மீறி செலுத்தியதாகவும் சீன அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே தற்போது 5ஜி தொழிநுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தின் நிறைவில் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை பிரித்தானிய பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்காவினை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.