இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியா செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென  சீனா தெரிவித்துள்ளது.

எல்லை விரிவாக்க காலமெல்லாம் ஓய்ந்து விட்டது. இது வளர்ச்சிக்கான காலம் என பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே புதுடெல்லியிலுள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தன் ருவிட்டரில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சீனா, அண்டை நாடுகளுடனான எல்லைகளை அமைதி பேச்சுவார்த்தைகள் ஊடாகவே வகுத்துள்ளது.

இந்த செயற்பாடுகளினால் அண்டை நாடுகளுக்கிடையில் ஒற்றுமையான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

எனவே, எல்லை விரிவாக்கத்தை சீனா மேற்கொள்வதாகக் கூறுவது பொய்யான கருத்தாகும்.

சீனாவும் இந்தியாவும் இராணுவம் மற்றும் இராஜிய வழியின்  ஊடாகதொடர்பில் இருக்கும் நாடுகள்.

எனவே இரு நாடுகளும் எல்லையில் சூழ்நிலை சிக்கலாகும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.