நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 16 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணியவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2642 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 652 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்திய கண்காணிப்பிலும் உள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.