பொதுவாக பெண்களின் கூந்தல் கெடுக்கும் காரணிகளில் பொடுகு, பேன் பெரும் பங்காற்றுகின்றன.
இவை ஒரு வகை புற ஒட்டுண்ணி. இவை தலைமுடி மற்றும் சருமத்தில் ஒட்டிக் கொண்டு வாழக் கூடியவை.
நமது தலையில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும். அத்துடன் வேகமாக இனப்பெருக்கம் செய்யும். தலைமுடியில் முட்டையிட்டு ஒரு வகையான அரிப்பை ஏற்படுத்தும்.
பேன்களை அவ்வளவு இலகுவாக தலையிலிருந்து வெளியேற்ற முடியாது. மாறாக வியர்வை அதிகமாக இருக்கும் பொழுது இனப்பெருக்கம் செய்யும்.
அந்த வகையில் பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில மருந்துகளை உள்ளன. அவை தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வேப்பிலை மருந்து
- வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணைய் இவை இரண்டையும் சம அளவில் கலந்து தலைக்கு குளிப்பதற்கு முன்னர் தலையில் தடவவும். முடி வேர்கால்களுக்கு படும்படி தடவினால் பலன் சீக்கிரம் கிடைக்கும். இப்படி குறைந்தது வாரத்திற்கு 3 தடவை செய்ய வேண்டும்.
- பேன் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் வேப்பிலைகளை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் அப்படி விட்டு விடவும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இந்த மருந்து பேன்களை மட்டுமல்ல பொடுகு பிரச்சினைக்கும் நிவாரணம் கொடுக்கும்.
- தூங்குவதற்கு முன்னர் தலையணையில் வேப்பிலை மற்றும் துளசி இலைகள் பரப்பி வைத்து கொள்ளவும். பேன் பிரச்சினையிருப்பவர்கள் அதன் மேல் தலையை வைத்து தூங்கலாம். துளசி வாசனைக்கு தலையிலிருந்து பேன் தலைத்தெறிக்க ஓடும்.