ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படும் செவ்வாயின் நிலைமாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், செவ்வாய் செப்டம்பர் 2ஆம் தேதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றி, புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான்.
செவ்வாய், குருவின் நட்சத்திரத்தில் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாரத அதிர்ஷ்டத்தையும் தொழில் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகின்றது.
அப்படி செவ்வாயின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். பரம்பரைச் சொத்துக்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக, மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். தொழிலிலும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறும் சூழல் உருவாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம்.
கடின உழைப்பிற்கான உரிய பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் சந்தர்ப்பங்களும் அமையும்.
மகரம்

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நல்ல பலன்களையும் வழங்கப் போகிறது. நீண்ட காலமாக தொடங்க முடியாமல் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாகத் தொடங்குவீர்கள்.
உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இழுபறியில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.
அதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். செவ்வாயின் அருளால் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான முன்னேற்ற பலன்கள் கிடைக்கும்.
