இந்தியாவில் 72-வது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நண்பர்களுக்கு இடையே (இந்தியா-ஆஸ்திரேலியா), இருநாட்டு தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி. தேசிய நாள் மட்டுமல்லாமல் ஜனநாயகம், சுதந்திரம், பன்முகத்தன்மை என அனைத்தையும் இந்தியா -ஆஸ்திரேலியா பகிர்ந்துள்னன என பதிவிட்டுள்ளார்.