பொதுப் போக்குவரத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகின்றமை தொடர்பில் இன்று (10) விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ற வகையிலேயே பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சாரதிக்கு மேலதிகமாக இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.