சிறுவயதில் இருந்தே நாம் எல்லோரும் பென்சிலில் எழுதித்தான் பழகிருப்போம்.
இந்த பென்சில் பயன்படுத்தவதற்கான காரணம் எழுத்துக்களை எழுதும் சமயத்தில் அது பிழையாகிப்போனால் அதை மீண்டும் அழித்து விட்டு திரும்பவும் எழுதுவதற்கே இந்த பென்சில்கள் உருவாக்கப்பட்டன.
இதனால் பாடங்களை கற்று கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். அந்த வகையில் பென்சிலுக்கு பின்னால் ஏன் இந்த கருப்பு நிறம் இருக்கிறது தெரியுமா? இதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் பல நிறுவனங்களின் பென்சில்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் அந்த பென்சில் எல்லாவற்றிற்கும் பின் கருப்பு நிறத்தில் இருப்பதை கண்டிருப்பீர்கள்.
நிறுவனம் எதாவது ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்றால் அதில் பல பிஸ்னஸ் யுத்தி காணப்படும். அப்படியான ஒரு யுத்தி தான் இந்த பென்சில் மூலமும் காட்டப்பட்டுள்ளது.
இந்த கருப்பு நிறம் போடப்பட்தற்கான காரணம் குழந்தைகள் பென்சிலை பயன்படுத்தும் போது அந்த கருப்பு நிறத்தை அடைய முன் புதிய பென்சிலை வாங்க நினைப்பார்கள்.
இதனால் தான் இந்த பென்சில்களின் பின் பகுதியில் இந்த கருப்பு நிறம் இருக்கிறது. இந்த யுத்தியை பயன்படுத்தி குறித்த பென்சில் நிறுவனம் வெற்றியும் கண்டுள்ளது.