தலங்கம பொலிஸாரினால் பத்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாதுக்க, கலகெதரவில் இரு பகுதிகளில் இருந்து மேலும் 8 கிலோ 32 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.