லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளியான இப்படம் உலகளவில் சுமார் ரூ. 250 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
அதே போல் கொரோனா தாக்கத்தினால் முடங்கி கிடந்த தமிழ் திரையுலகத்தை மீட்டெடுத்ததும் மாஸ்டர் திரைப்படம் தான்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருக்கும் காட்சிகள் தளபதி விஜய் நடிப்பில் இதற்கு முன் வெளியான சூப்பர்ஹிட் படத்தில் இருக்கிறது என புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலவி வருகிறது.
அது விஜய் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலாயுதம் படம் தான். அதில் இருக்கும் சில காட்சிகள் போலவே மாஸ்டர் படத்திலும் இருக்கிறதாக கூறும் புகைப்படம் இதோ..