பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிங்கப்பெண்ணாக வெளிவந்த ஷிவானி இன்று தனது 20வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
ஷிவானியின் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் ரம்யா பாண்டியன் தம்பி பரசு பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஷிவானியின் பிறந்தநாள் காமன் டிபி போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு பிறந்த நாள் வரும்போது காமன் டிபி போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது பரசுபாண்டியன் ஷிவானியின் பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானிக்கு பாலா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதோடு, அவருக்கு கேக் ஊட்டியும் விட்டுள்ளார். ஏற்கெனவே ஷிவானி அம்மாவால் இருவருக்கும் மனக்கசப்பு இருந்த நிலையில், தற்போது கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கேக் ஊட்டிய பாலாஜியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஷிவானி போதையில் தள்ளாதே என்ற பாடலில் நடிக்க உள்ளார் என்பதும் அவருடன் நடிகர் பூரணேஷ் என்பவர் நடனமாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.