நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 324 குடும்பங்களைச் சேர்ந்த 1,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கண்டி மாவட்டத்தின் கங்கவட்டகோரல பகுதியைச் சேர்ந்தவர்கள் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக வீடொன்று முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், 113 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்று (16) மாலை 6.00 மணி வரை மின்னல் தாக்கம் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.