போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.