திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது தொன்றுதொட்டு வழக்கமாகவுள்ளது. இது திருமணமானவர்களை தனித்துவமாக காட்டுவதற்கு ஒரு உத்தியாக பயன்படுத்தப்படுவதாகவே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நமது முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லிவைக்கவில்லை. திருமணமான பெண்கள் குங்குமம் அணிவதன் பின்னால் பல்வேறு மத சாஸ்திரங்கள் பின்பற்றப்படுகின்றன.
இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் குங்குமம் மிகவும் புனித தன்மை கொண்ட பொருளாக பார்க்கப்படுகின்றது.இதனை கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகமும் செய்யப்படுகின்றது.
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் கணவனுக்கு நீண்ட ஆயுளும் அதிர்ஷ்டடும் கிடைக்கும் என இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
குங்கும் வைக்கும் போாது குறிப்பாக அதை எந்த விரலால் வைக்க வேண்டும் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மோதிர விரலை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்த விரல் சூரியக் பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது.
இதனால் தான் இந்த விரலில் குங்குமம் வைத்தால் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் குங்குமம் வைக்கும் போது பார்வதி தேவியை மனதில் நினைத்து ஆசீர்வாதம் பெற்று நெற்றியில் வைத்துக்கொள்வதன் மூலம் பெண்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
மேலும் வாரத்தில் ஒரு முறையாவது கணவன் கையால் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கணவன் மனைவிக்கு இடையிலான உறவு மேம்படும்.
ஒருபோதும் குங்குமம் வைக்கும் போது கீழே சிந்தினாள் அதை மீண்டும் நெற்றியில் வைக்க கூடாது. அப்படி வைத்தால், கணவனின் ஆயுள் குறையும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.